பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்


பிரியங்கா சோப்ராவின் புதிய ஹாலிவுட் படம்
x
தினத்தந்தி 15 April 2019 4:33 AM IST (Updated: 15 April 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியானது.

இது வதந்தி என்று பிரியங்கா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் ஆகிய ஹாலிவுட் படங்களில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். தற்போது இன்னொரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதைகளை சொல்வதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது. விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த படம் இந்திய திருமணங்கள் பற்றிய நகைச்சுவை படமாக தயாராகிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை மிண்டி காலிங் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Next Story