நடிகர் பிரபுவின் 225-வது படம்
படவிழாவில் பிரபு, மதுபாலா. அருகில் ‘காலேஜ்குமார்’ படத்தில் ஜோடியாக நடிக்கும் ராகுல்விஜய்-பிரியாவட்லமனி உள்ளனர்.
பிரபு 1982-ல் சங்கிலி படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். தற்போது அவரது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. அப்போது திரையுலகினர் பலர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பிரபு பேசிதாவது:-
“நான் 37 வருடங்களாக சினிமாவில் நடித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் குமார் 225-வது படமாக தயாராகிறது. 22 வருடங்களுக்கு முன்பு நானும் மதுபாலாவும் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஜோடியாக நடித்தோம். தற்போது காலேஜ் குமார் படத்தில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.
சிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்ப்பேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இதுபோல் பத்மினி, சாவித்திரி, ஆகியோருடனும் சேர்ந்து நடக்காதது வருத்தம். சினிமா வாழ்க்கையில் இவை எனது நிறைவேறாத ஆசைகளாக உள்ளன.
எனது மகன் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து எப்போது நடிப்பீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். நல்ல கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்.” இவ்வாறு பிரபு கூறினார்.
காலேஜ் குமார் படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய், கதாநாயகியாக பிரியாவட்லமனி ஆகியோர் நடிக்கின்றனர். எல்.பத்மநாபா தயாரிக்கும் இந்த படத்தை ஹரிசந்தோஷ் இயக்குகிறார். காஷிப் இசையமைக்கிறார்.

Related Tags :
Next Story