துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் விஷால்
'துப்பறிவாளன்' இந்த படத்தில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் ஆகியோரும் நடித்து இருந்தனர்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017-ல் திரைக்கு வந்த ‘துப்பறிவாளன்’ என்ற திகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்தது. இந்த படத்தில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் ஆகியோரும் நடித்து இருந்தனர்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் விஷால்- மிஷ்கின் கூட்டணியில் தயாராக உள்ளது. படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே விஷால் அயோக்யா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் இதை மறுத்தனர்.
ஏற்கனவே தமிழில் எந்திரன், சண்டக்கோழி, சிங்கம், விஸ்வரூபம், சாமி, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்டநாள் முதல், மாதவனின் யாவரும் நலம் படங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராக உள்ளன.

Related Tags :
Next Story