செல்வராகவனின் அடுத்த படத்தில்,ஜெயம் ரவி?
செல்வராகவன் டைரக்ஷனில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் பட உலகின் முன்னணி டைரக்டர்களில் ஒருவர், செல்வராகவன். அவர் டைரக்டு செய்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதையடுத்து அவர், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை டைரக்டு செய்தார்.
இது, ஒரு பேய் படம். எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசன்ட்ரா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் முடிவடைந்த பிறகும் திரைக்கு வரவில்லை. இதையடுத்து செல்வராகவன் டைரக்ஷனில், சூர்யா நடித்த ‘என்.ஜி.கே.’ படம் இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
அடுத்து செல்வராகவன் டைரக்ஷனில் உருவாகும் புதிய படத்தில், ஜெயம் ரவி நடிப்பார் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story