அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரூ.9000 கோடி வசூல்
ஹாலிவுட் படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
அவெஞ்சர்ஸ் படங்களில் இது கடைசி பாகம் என்பதால் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டன. தமிழ்நாட்டிலும் கூடுதல் தியேட்டர்களை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு ஒதுக்கினர்.
தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இதனால் சில தமிழ் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை பார்க்க உலகம் முழுவதும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பியது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் ரூ.9 ஆயிரம் கோடி வசூல் ஈட்டி சாதனை நிகழ்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று ரூ.63.81 கோடியும், சனிக்கிழமை ரூ.62.14 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.62.9 கோடியும் வசூலித்து மொத்தம் ரூ.188.87 கோடியை எட்டியது. திங்கட்கிழமை வசூலையும் சேர்த்து மொத்தம் ரூ.225 கோடி வசூலித்தது. இந்தியாவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பெற்றுள்ளது. இந்த படம் ரூ.2 ஆயிரத்து 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story