‘அசுரன்’ படத்தில் புதிய தோற்றத்தில் தனுஷ்
தனுஷ் நடிப்பில் வட சென்னை, மாரி-2 ஆகிய படங்கள் கடந்த வருடம் திரைக்கு வந்தன. கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா தாமதமாகிறது.
வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.
இந்த நிலையில் திடீரென்று துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதில் சினேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதனால் அசுரன் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ‘அசுரன்’ படப்பிடிப்பில் தனுஷ் இணைந்துள்ளார். தனது அசுரன் பட தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இது இறுதிகட்ட படப்பிடிப்பு என்றும் தெரிவித்து உள்ளார். அவரது தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
தனுஷ் வெளியிட்டுள்ள போஸ்டரில் அசுர வேட்டை விரைவில் என்று அறிவித்து உள்ளதால் படப்பிடிப்பு சில வாரங்களில் முடிந்து படம் திரைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுசுடன் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார்.
Related Tags :
Next Story