இகோர் டைரக்ஷனில் காதல் ஜோடியும் சாதி வெறியும்...
‘கலாபக்காதலன்,’ தேன் கூடு,’ ‘வந்தா மல’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், இகோர்.
ஒரு காதல் ஜோடிக்கு எதிரான சாதி வெறியை கருவாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு ‘வகிபா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
‘‘வண்ணக்கிளி பாரதி என்பதின் சுருக்கமே ‘வகிபா.’ பாரதி என்ற இளைஞன் வண்ணக்கிளி என்ற பெண்ணை விரும்புகிறான். அவன் காதலுக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தாண்டி வாழ தொடங்கும்போது, அந்த அப்பாவி காதலர்களை சாதி வெறி எப்படி விரட்டுகிறது? என்பதே கதை.
சமூக நியாயம் கிடைக்காத ஒரு தனி மனிதன் எப்படி தன்னைத்தானே மறைத்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது? என்ற அவலத்தையும் படம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. மனிதன், சக மனிதனை தனக்கு சமமாக மதிக்க வேண்டும் என்ற கருத்தும் படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இதில், புதுமுகம் விஜய்கரண் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கதாநாயகியாக மனிஷாஜித் நடித்து இருக்கிறார். மகேந்திரன், கஞ்சா கருப்பு, ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். கதை எழுதி படத்தை தயாரிப்பவர், ஸ்சொப்பன் பிரதான். ரா.கண்ணன் வசனம் எழுதியிருக்கிறார்.’’
Related Tags :
Next Story