கூடுதல் தியேட்டர்களில் மம்முட்டி படம்!


கூடுதல் தியேட்டர்களில் மம்முட்டி படம்!
x
தினத்தந்தி 3 May 2019 4:29 AM GMT (Updated: 3 May 2019 4:29 AM GMT)

பேராசிரியர் சாணக்யன் படத்துக்கு பெரிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை

மம்முட்டி, வரலட்சுமி சரத்குமார், பூனம் பாஜ்வா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம், ‘பேராசிரியர் சாணக்யன்.’

ஹாலிவுட்டில் தயாரான ‘அவென்ஜர்ஸ்’ (ஆங்கிலம்) படம் அதே தேதியில் திரைக்கு வந்ததால், பெரிய தியேட்டர்கள் மற்றும் மால்களில் அந்த படத்தை போட்டிபோட்டு திரையிட்டார்கள். ‘பேராசிரியர் சாணக்யன்’ படத்துக்கு பெரிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

‘‘கிடைத்த தியேட்டர்களில் அந்த படத்தை திரையிட்டோம். படம் எதிர்பார்த்ததற்கும் மேலாக வசூல் செய்ததால், இப்போது கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளன’’ என்கிறார், ‘பேராசிரியர் சாணக்யன்’ படத்தின் தயாரிப்பாளர் சி.எச்.முகமது!


Next Story