“கவர்ச்சியாக நடிப்பதால் பட வாய்ப்பு குறையாது” -நடிகை ராஷி கன்னா


“கவர்ச்சியாக நடிப்பதால் பட வாய்ப்பு குறையாது” -நடிகை ராஷி கன்னா
x
தினத்தந்தி 4 May 2019 3:45 AM IST (Updated: 3 May 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

அடங்க மறு படங்களில் நடித்து பிரபலமான ராஷி கன்னா இப்போது விஷால் ஜோடியாக அயோக்கியா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள், ஜெயம் ரவி ஜோடியாக அடங்க மறு படங்களில் நடித்து பிரபலமான ராஷி கன்னா இப்போது விஷால் ஜோடியாக அயோக்கியா படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் எல்லா படங்களிலும் கவர்ச்சியாக வருவதாகவும், இதனால் சினிமா வாய்ப்புகள் குறைந்து விடாதா என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். நான் கவர்ச்சியாக நடிப்பது உண்மைதான். நல்ல நடிகை என்று ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

வணிக ரீதியான படங்களில் கவர்ச்சியாக நடிப்பதால் சினிமா வாழ்க்கையில் பாதிப்பு வந்துவிடும் என்ற பயம் எனக்கு இல்லை. கதை பிடித்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். இமைக்கா நொடிகள், அடங்க மறு போன்ற தமிழ் படங்களில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தன. சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டுகிறார்கள்.

விஷாலுடன் நடிக்கும் அயோக்கியா திரைக்கு வர தயாராக இருக்கிறது. எல்லா படங்களும் பெயருக்கு நடிப்பது மாதிரி இல்லாமல் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வது மாதிரி இருக்கும்.

இந்த வயதில் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்கள்தான் வரும். வருகிற வாய்ப்புகளில் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கிறேன். கவர்ச்சியாக நடிப்பதால் சினிமா வாய்ப்புகளில் எந்த பாதிப்பும் வராது”. இவ்வாறு ராஷி கன்னா கூறினார்.

Next Story