ஓய்வு பெறுகிறாரா மோகன்லால்?


ஓய்வு பெறுகிறாரா மோகன்லால்?
x
தினத்தந்தி 4 May 2019 4:09 AM GMT (Updated: 4 May 2019 4:09 AM GMT)

மலையாள சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் மோகன்லால்

40 ஆண்டுகளாகவும் முன்னணி கதாநாயகனாகவும் இருந்து வருகிறார். தற்போதைய இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் வித்தியாசமான, அதிரடியான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வரு கிறார். இந்த நிலையில் இனிவரும் காலங்களில் சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறாராம் மோகன்லால். தற்போது அவர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டும் அவரது கைவசம் 4 படங்கள் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான ‘லூசிபர்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் மூலம் பிருத்விராஜ், தன்னை ஒரு இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல் தானும் ஒரு இயக்குனராக ஆக வேண்டும் என்று நினைக்கிறார் மோகன்லால். அதனால் ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். அந்த படத்திற்கு ‘பரோஸ்’ என்று பெயரிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு வந்த வாஸ்கோடகாமா, இங்குள்ள செல்வங்களை கொள்ளையடித்தார். அதில் பலவற்றை பாதுகாப்பாக இந்தியாவுக்குள்ளேயே பதுக்கியும் வைத்தார். அந்த சொத்துக் களுக்கு எல்லாம் பாதுகாவலாக பரோஸ் என்பவனை காவலாக வைத்தார் என்று மலையாளக் கரையோரத்தில் ஒரு புனைவுக் கதை சொல்லப்பட்டு வருகிறது. இந்த புனைவுக் கதையைத்தான் தற்போது கையில் எடுத்திருக்கிறார், மோகன்லால். பரோஸ் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து, படத்தையும் இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.

இந்த இயக்கத்திற்குப் பிறகுதான் சினிமா படங்களை குறைத்துக கொண்டு, குடும்பத்திற்கு அதிக நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறாராம்.



Next Story