சினிமா செய்திகள்

பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடிய நடிகை திரிஷா + "||" + As Trisha Krishnan celebrates her birthday today, let's look at some of her rare yet beautiful photos

பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடிய நடிகை திரிஷா

பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடிய நடிகை திரிஷா
நடிகை திரிஷா இன்று தமது 36-வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடினார்.
சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.  

இந்நிலையில், நடிகை திரிஷா இன்று தமது 36-வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக கொண்டாடினார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் நடித்த 60-வது திரைப்படமான 'பரமபத விளையாட்டு' படத்தின் டிரெய்லர் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.