விஜயசாந்தியுடன் ரம்யாகிருஷ்ணன்!
தமிழ்பட உலகில் பிரகாசிக்காத கதாநாயகிகள் சிலர் தெலுங்கு பட உலகுக்குப்போய் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்கள்.
தமிழ்பட உலகில் பிரகாசிக்காத சில கதாநாயகிகள் தெலுங்கு பட உலகுக்குப் போய் முன்னணி கதாநாயகியாக பிரகாசித்து இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக விஜயசாந்தி, ரம்யாகிருஷ்ணன், அஞ்சலி போன்றவர்களை குறிப்பிடலாம்.
இந்த வரிசையில் இடம் பெற்ற ரம்யாகிருஷ்ணன், ‘படையப்பா’ படத்தில் நடித்த ‘நீலாம்பரி’ வேடத்தின் மூலம் பரபரப்பான நாயகி ஆனார். ‘பாகுபலி’ படத்தில் அவர் நடித்த ‘ராஜமாதா’ கதாபாத்திரம் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அவருக்கு இப்போது புது பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் கனமான கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து அவர் நடிக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் விலைமாதுவாக துணிச்சலுடன் நடித்து இருந்தார்.
தற்போது அவர் மகேஷ்பாபு நாயகனாக நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதே படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் விஜயசாந்தி நடிக்கிறார். இவரும், ரம்யாகிருஷ்ணனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன!
Related Tags :
Next Story