சினிமா செய்திகள்

அஜித்குமாருடன் மேலும் ஒரு படத்தில், வினோத்! + "||" + 'Pink' is making 'remake' of Hindi, director Vinod

அஜித்குமாருடன் மேலும் ஒரு படத்தில், வினோத்!

அஜித்குமாருடன் மேலும் ஒரு படத்தில், வினோத்!
‘பிங்க்’ இந்தி படத்தை ‘ரீமேக்’ செய்து வருகிறார், டைரக்டர் வினோத்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகியோரை வைத்து படம் இயக்க எல்லா முன்னணி டைரக்டர்களும் ‘கியூ’வில் நிற்கின்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், அஜித் கேட்டுக் கொண்டதற்காக தனது சொந்த கதையை ஒதுக்கி வைத்து விட்டு, ‘பிங்க்’ (இந்தி) படத்தை ‘ரீமேக்’ செய்து வருகிறார், டைரக்டர் வினோத்.

அஜித் படம் முடிவடைந்ததும் வினோத் ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவரை வைத்தும் படம் இயக்குகிறார் என்று ஒரு தகவல் கோடம்பாக்கம் முழுவதும் வேகமாக பரவியிருக்கிறது.

இதுபற்றி வினோத்திடம் கேட்டதற்கு, ‘‘அது உண்மையான தகவல் அல்ல. அஜித்துடன் எனக்கு இன்னும் ஒரு படம் இருக்கிறது. ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவரின் படங்களையும் நான் இயக்கவில்லை’’ என்றார்!