சில்க் சுமிதாவை சீரழித்த நடிகர்கள் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்


சில்க் சுமிதாவை சீரழித்த நடிகர்கள் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்
x
தினத்தந்தி 6 May 2019 12:03 AM GMT (Updated: 6 May 2019 12:03 AM GMT)

தமிழ் பட உலகில் 1970 மற்றும் 80-களில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்த சில்க் சுமிதாவை முதன் முதலில் வினுசக்கரவர்த்தி ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சிலுக்கு என்ற சாராய கடையில் பணியாற்றும் பெண்ணாக அறிமுகப்படுத்தினார். பிறகு அந்த பெயரே அவருக்கு நிலைத்தது.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 17 வருடங்களில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மூன்று முகம், அமரன், சகலகலா வல்லவன், அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை. தனிக்காட்டு ராஜா, தங்கமகன், பாயும்புலி, துடிக்கும் கரங்கள், தாய்வீடு, சத்யா என்று பல முக்கிய படங்கள் இவர் நடிப்பில் வந்தன.

1996-ல் சென்னையில் தான் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் சில்க் சுமிதா தூக்கில் பிணமாக தொங்கினார். கடன், காதல் தோல்வியால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அவரை சொத்துக்காக கொலை செய்துவிட்டதாக ஆந்திராவில் இருந்து வந்த அவரது தாயும் தம்பியும் கதறி அழுதபடி புகார் கூறினார்கள்.

சில்க் சுமிதாவின் வாழ்க்கை வித்யாபாலன் நடிக்க த டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தியில் படமாகி வெளிவந்தது. மலையாளத்திலும் இந்த படத்தை ரீமேக் செய்தனர். இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி சில கதாநாயகர்கள் சில்க் சுமிதாவை சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். தனது முகநூல் பக்கத்தில், அவர், “சில்க் சுமிதாவை முன்னணி கதாநாயகர்கள் உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர்.

அந்த சைக்கோக் களை எப்படி பட உலகின் சகாப்தம் என்று அழைக்க முடியும். சினிமா மற்றும் அரசியல் காரணமாக அவரை இழந்து விட்டோம். உங்களை மறக்கமாட்டோம் சில்க் சுமிதா” என்று கூறியுள்ளார். எந்த நடிகர் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

Next Story