எனக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.10 லட்சமா? பட விழாவில் யோகிபாபு பேச்சு
நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தர்மபிரபு. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தர்மபிரபு. ராதாரவி, ரமேஷ் திலக், சாம், ரேகா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை முத்துக்குமரன் டைரக்டு செய்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் யோகிபாபு கலந்து கொண்டு பேசியதாவது:-
“தர்மபிரபு படத்தில் எமதர்மனாக நடித்துள்ளேன். ‘மேக் அப்’ போடுவதற்கு 15 நிமிடங்கள் தான் ஆனது. படத்தில் வசனங்கள் நகைச்சுவையாகவும், நாட்டு நடப்பில் தற்போதுள்ள விஷயங்களை சார்ந்தும் இருக்கும். எமதர்மன் கெட்அப்பில் கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது கம்பீரமாக இருந்தது.
படம் முழுவதும் நகைச்சுவையாக இருந்தாலும், எமதர்மனுக்கு கோபம் வந்தால் என்னவாகும் என்பதையும் கூறியிருக்கிறோம். எனக்கு ஜோடி யாரும் கிடையாது. பூலோக காட்சிகள் மற்றும் ஒரு சில காட்சிகளில் வேறு கெட்அப்பிலும் வருவேன்.
நான் கால்ஷீட் சரியாக கொடுப்பதில்லை என்ற செய்தி தவறானது. ஒரே நேரத்தில் ‘தர்மபிரபு’ மற்றும் ‘கூர்கா’ படத்தில் நடித்தேன்.
‘பட்டிபுலம்’ என்ற படத்தில் நான் 5 காட்சிகளில் மட்டும் தான் நடித்தேன். ரூ.3,500 சம்பளமாக பெற்றேன்.
ரஜினி ‘கோலமாவு கோகிலா’ படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று என்னைப் பாராட்டினார். ‘தர்மபிரபு’ படத்தின் டிரெய்லரைப் பார்த்து ரசித்து வாழ்த்தினார். நான் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள் கஷ்டம் எனக்கு தெரியும்.” இவ்வாறு யோகிபாபு பேசினார்.

Related Tags :
Next Story