சினிமா செய்திகள்

சேரனின், ஆட்டோகிராப் 2-ம் பாகம் + "||" + Cheran, Autograph Part 2 film

சேரனின், ஆட்டோகிராப் 2-ம் பாகம்

சேரனின், ஆட்டோகிராப் 2-ம் பாகம்
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற பிறகு ஏற்படும் 3 பருவ காதலை உணர்வுப்பூர்வமாக இந்த படம் சொல்லி இருந்தது.
சேரன் நடித்து இயக்கி 2004-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ஆட்டோகிராப். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற பிறகு ஏற்படும் 3 பருவ காதலை உணர்வுப்பூர்வமாக இந்த படம் சொல்லி இருந்தது. ஒரு தலை ராகம் படத்துக்கு பிறகு வெளியான உன்னதமான காதல் கதை என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.


இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கோபிகா பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினேகா, மல்லிகா ஆகியோரும் நடித்து இருந்தார்கள். படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’ பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடிய சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே பாடலுக்கும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராவதால் ஆட்டோகிராப் 2-ம் பாகத்தையும் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் ஆட்டோகிராப் 2-ம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் சேரன் அறிவித்து உள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆட்டோகிராப்-2 படத்துக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று சேரனிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சேரன் கண்டிப்பாக வரும் என்று கூறியுள்ளார். இந்த படத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, கலகலப்பு, சண்டக்கோழி, திருட்டுப்பயலே உள்பட பல படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன.