சினிமா செய்திகள்

‘டைட்டானிக்’ சாதனையை முறியடித்தது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் + "||" + Avengers End Game Rs 14,000 crore collections

‘டைட்டானிக்’ சாதனையை முறியடித்தது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரூ.14 ஆயிரம் கோடி வசூல்

‘டைட்டானிக்’ சாதனையை முறியடித்தது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரூ.14 ஆயிரம் கோடி வசூல்
‘ அ வெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்து 2 வாரங்கள் முடிந்துள்ள நிலையிலும் தொடர்ந்து படத்தை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் நிரம்புகிறது.
அவெஞ்சர்ஸ் படங்களில் இது கடைசி பாகம் என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வத்தோடு படத்தை பார்க்கிறார்கள். ஒரு முறை பார்த்தவர்கள் மீண்டும் பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டில் தமிழ் படங்களை விட்டு அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படத்துக்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்கினார்கள். படம் திரையிட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் ரூ.14 ஆயிரம் கோடி வசூல் ஈட்டி சாதனை நிகழ்த்தி உள்ளது.


இதன் மூலம் 22 வருடங்களாக அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த டைட்டானிக் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இரண்டே வாரத்தில் முறியடித்துள்ளது. இதே நிலை நீடித்தால் முதல் இடத்தில் இருக்கும் அவதார் படத்தையும் முந்தும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவில் மட்டும் இந்த படம் ரூ.300 கோடி வசூலித்து, இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் சாதனை நிகழ்த்திய படம் என்ற பெருமையை அவெஞ்சர்ஸ் என்ட் கேம் பெற்றுள்ளது. இந்த படம் ரூ.2 ஆயிரத்து 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.