அமலாபாலின் மேங்கோ டுவீட் : ரசிகர்களின் ஆதரவும்.. எதிர்ப்பும்..


அமலாபாலின் மேங்கோ டுவீட் : ரசிகர்களின் ஆதரவும்.. எதிர்ப்பும்..
x
தினத்தந்தி 10 May 2019 6:19 PM IST (Updated: 10 May 2019 6:19 PM IST)
t-max-icont-min-icon

நடிகை அமலாபால் டுவிட்டரில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால்.  தனது கணவரை பிரிந்து வாழும் நடிகை அமலா பால் அவ்வப்போது, தான் அணியும் ஆடை விவகாரங்களால் சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

அந்த வகையில், சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டும் வருகிறார். தற்போது கவர்ச்சியான வசனமும் எழுதி கிறங்கடித்துள்ளார்.

டைட்டான மஞ்சள் டாப்ஸ், கிரே நிறப்பாவாடை அணிந்து கூலிங் கிளாசுடன் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படியே ஆவாய் என்று சிலர் கூறுகிறார்கள். இன்றைக்கு நான் சந்தோஷமான மாங்காயாக இருக்கிறேன் என்ற கமென்ட்டுடன் மகிழ்ச்சியான தருணங்கள் என ஹேஷ்டேக் வெளியிட்டிருக்கிறார். அமலாபாலின் இந்த பதிவுக்கு ரசிகர்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

Next Story