சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில் ! குருவியார் + "||" + Cinematic question answer! Kuruviyar

சினிமா கேள்வி பதில் ! குருவியார்

சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
மீனாவை இப்போதெல்லாம் படங்களில் பார்க்க முடியவில்லையே...அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? (ஆர்.மீனாட்சி சுந்தரம், திருச்சி)
மீனா இப்போது, ‘சின்னத்திரை’ நிகழ்ச்சியில் நடுவராக இருந்து அந்த நிகழ்ச்சிக்கு கலகலப்பூட்டி வருகிறார்!
***
குருவியாரே, திரிஷா நடித்துக் கொண்டிருக்கும் ‘பரமபத விளையாட்டு’ பேய் படமா? (கோ.விஜயராஜ், கோவை)
‘பரமபத விளையாட்டு’ பேய் படம் அல்ல. ஆனால், படத்தில் திகில் இருக்கிறதாம்!
***
வரலட்சுமி சரத்குமார் வில்லி வேடங்களில் நடிக்க காரணம் என்ன? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)
வில்லி வேடங்கள்தான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுக்கிறதாம்!
***
குருவியாரே, டைரக்டர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்? (எம்.கோபால், ஸ்ரீரங்கம்)
சந்தேகமே இல்லாமல், ஷங்கர்தான்!
***
இப்போது உள்ள கதாநாயகர்களில் சொந்த குரலில் பாடும் திறனுள்ளவர்கள் யார்-யார்? (எஸ்.முருகேசன், குமாரபாளையம்)
விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகிய 4 பேரும் சொந்த குரலில் பாடும் திறன் கொண்டவர்கள்!
***
குருவியாரே, சிம்ரனை, ‘கனவுக்கன்னி’ என்று சொல்லலாமா? (டி.வி.அந்தோணி, அணைக்கரைப்பட்டி)
‘முன்னாள் கனவுக்கன்னி’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்!
***
நடிகைகளில், செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர்கள் யார்? (எம்.குரு, குன்னூர்)
கவுதமியும், திரிஷாவும்...இரண்டு பேர் வீடுகளிலும் நிறைய செல்லப்பிராணிகளை வளர்க் கிறார்கள்!
***
குருவியாரே, ரெஜினா கசன்ட்ராவின் சொந்த ஊர் எது, இப்போது அவர் வசிப்பது எங்கே? (என்.சின்னதுரை, சேத்துமடை)
ரெஜினா கசன்ட்ரா, தமிழ் பெண். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இப்போது அவர் ஐதராபாத்தில் வசித்து வரு கிறார்!
***
எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கிறாரே...பொருத் தமாக இருக்குமா?(என்.ஜா பர், மேலப்பாளையம்)
நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. ஒப்பனைக்குப்பின், பார்க்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத் திருக்கிறார்கள்!
***
குருவியாரே, ரஜினிகாந்த் நடித்த படங்களில் மிக அதிக செலவில் உருவான படம் எது? (ஜெ.அரவிந்த், கொடைக்கானல்)
‘2.0.’ ரூ.400 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம், இது!
***
ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலில் இசையமைத்த படம் எது, அந்த படத்தின் இயக்குனர் யார்? (டேனியல்ராஜ், அரவக்குறிச்சி)
ஏ.ஆர்.ரகுமான் முதன்முதலாக இசையமைத்த படத்தின் பெயர், ‘ரோஜா.’ இது, மணிரத்னம் இயக்கிய படம். தயாரிப்பு: மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர்!
***