சினிமா செய்திகள்

சினிமா தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி திடீர் மரணம் + "||" + Cinema producer Venkatrama Reddy is sudden death

சினிமா தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி திடீர் மரணம்

சினிமா தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி திடீர் மரணம்
சினிமா தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
சென்னை,

எம்.ஜி.ஆர் நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை’, சிவாஜி கணேசன் நடித்த ‘வாணி ராணி’ உள்பட பல படங்களை தயாரித்த விஜயா வாகினி புரொடக்சன்ஸ் பி.நாகிரெட்டியின் இளைய மகன் வெங்கட்ராம ரெட்டி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். வடபழனியில் குடும்பத்துடன் வசித்து வந்த வெங்கட்ராம ரெட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று பகல் 1 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 75.


மரணம் அடைந்த வெங்கட்ராம ரெட்டிக்கு, பாரதிரெட்டி என்ற மனைவியும் ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா, அர்ச்சனா என்ற மகள்களும் உள்ளனர்.

வெங்கட்ராம ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஆவார். உழைப்பாளி, தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா உள்ளிட்ட படங் களை தயாரித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் படத்தை தயாரித்து வந்தார். வெங்கட்ராம ரெட்டியின் உடலுக்கு திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று (திங்கட்கிழமை) காலை உடல் தகனம் நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சினிமா தயாரிப்பாளருக்கு ஜாமீன் பெற ராமநாதபுரம் கோர்ட்டில் போலிச்சான்று கொடுத்த 2 பேர் கைது
சிறையில் உள்ள சினிமா தயாரிப்பாளருக்கு ஜாமீன் கேட்டு ராமநாதபுரம் கோர்ட்டில் போலிச்சான்று கொடுத்த 2 பேர், நீதிபதியின் நடவடிக்கையால் சிக்கினார்கள்.