‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தில் சசிகுமார் ஜோடி, மடோனா செபாஸ்டியன்!
சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்தை டைரக்டு செய்தவர், எஸ்.ஆர்.பிரபாகரன்.
சில வருட இடைவெளிக்குப்பின் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். படத்துக்கு பெயர் சூட்டாமலே படப் பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வந்தார்கள்.
இப்போது, இந்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தின் பெயர், ‘கொம்பு வச்ச சிங்கம்டா.’ இதில் சசிகுமார் ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்து இருக்கிறார். முக்கிய வேடங் களில் சூரி, டைரக்டர் மகேந்திரன், ஹரீஸ் பெராடி, சென்றாயன், தயாரிப்பாளர் இந்தர் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘குற்றம் 23,’ ‘தடம்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து இந்தர்குமார் தயாரிக்கும் படம், இது. படத்தை பற்றி டைரக்டர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறிய தாவது:-
“1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 12-ந் தேதி காரைக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு அடுத்து பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது.
ஏகாம்பரம் ஒளிப் பதிவு செய்து இருக்கிறார். திபு நைனன் தாமஸ் இசையமைத்து இருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடைபெற்று வருகிறது.”
Related Tags :
Next Story