திறமை இல்லாத வாரிசு நடிகர்களால் நிலைக்க முடியாது –ராதிகா ஆப்தே
வாரிசுகள் என்பதாலேயே பெரிய நடிகர்–நடிகைகள் ஆகி விட முடியாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
திரைப்படங்களில் வாரிசுகள் ஆதிக்கம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது:–
‘‘சினிமா பின்னணி உள்ள பிரபலங்களின் வாரிசுகள்தான் திரைப்படத்துறையில் முன்னேறுவார்கள் என்று பரவலான கருத்து உள்ளது. சினிமாவுக்கு வாரிசுகள் அதிகமாக வருகிறார்கள், அவர்களுக்குத்தான் பட வாய்ப்புகளும் கிடைக்கின்றன என்றும் பேசுகிறார்கள். இதை நான் ஏற்க மாட்டேன்.
வாரிசுகள் என்பதாலேயே பெரிய நடிகர்–நடிகைகள் ஆகி விட முடியாது. முதல் வாய்ப்பு வேண்டுமானால் வரலாம். ஆனால் இதில் நிலைத்து இருப்பதற்கு திறமை வேண்டும். அதோடு கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். உழைத்து வேலை செய்ய வேண்டும். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே சினிமாவில் நிலைத்து இருக்க முடியும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.
டைரக்டர் பிரியதர்ஷன்–நடிகை லிசியின் மகள் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, ‘‘சினிமாவில் நான் வாரிசு என்பதால் மட்டும் நீடிக்க முடியாது. எனது அம்மா, அப்பாவுக்கு சினிமாவில் இருக்கும் பெயரும் புகழும் என்மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். நான் எப்படி நடிக்கிறேன் என்று கவனிப்பார்கள். திறமை இருப்பவர்கள் சினிமாவில் நீடிப்பது சுலபம். வாரிசுகளுக்கு முதல் வாய்ப்புகள் வரும். வாரிசாக இல்லாதவர்கள் சுமாராக நடித்தாலும் பாராட்டுவார்கள்.
எனவே வாரிசு நடிகர் –நடிகை என்பது பெரிய பாரம்’’ என்றார்.
Related Tags :
Next Story