திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான 3 நடிகைகள்
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி விட்டதாக 3 நடிகைகள் தெரிவித்துள்ளனர்.
தமிழில் ‘மதராச பட்டினம்’ படத்தில் அறிமுகமாகி தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, 2.0 படங்களில் நடித்துள்ள எமிஜாக்சனுக்கும், இங்கிலாந்தில் சொந்தமாக நட்சத்திர ஓட்டல்களை நடத்தி வரும் தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக சுற்றி நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர்.
சமீபத்தில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி விட்டதாக எமிஜாக்சன் அறிவித்தார். ‘‘நான் தாய்மை அடைந்துள்ள இந்த தருணத்தை வீட்டின் மாடியில் நின்று சத்தமாக சொல்ல தோன்றுகிறது. எங்கள் குழந்தையை பார்க்க காத்திருக்க முடியவில்லை’’ என்றும் இன்ஸ்டாகிராமில் கூறினார். எமிஜாக்சனுக்கும், ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
இதுபோல் கார்த்தி, நாகார்ஜுனாவுடன் தோழா படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை கேப்ரியலாவும் திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகி உள்ளார். கேப்ரியலாவும், இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலும் காதலித்து வந்தனர். அர்ஜுன் ராம்பால் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். கேப்ரியலா கர்ப்பமாக இருப்பதாக அர்ஜுன் ராம்பால் அறிவித்து உள்ளார்.
இந்த நிலையில் அஜித்குமாருடன் பில்லா 2 படத்தில் நடித்த புரூனா அப்துல்லாவும் திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகி விட்டதாக அறிவித்து உள்ளார். இவரும் ஆலன் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த நிலையில் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ள புரூனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story