கதையை மாற்றி மீண்டும் தயாரான விக்ரம் மகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது
நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
நடிகர் விக்ரம் தனது மகன் துருவ்வை கதாநாயகனாக்க முடிவு செய்து சில மாதங்களுக்கு முன்பு பாலா இயக்கத்தில் களம் இறக்கினார். 1999–ல் பாலா இயக்கிய சேது படம்தான் விக்ரமுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனாலேயே அவரது படத்தில் அறிமுகப்படுத்தினார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன்ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து அதில் துருவ்வை நடிக்க வைத்தனர். ஆனால் படப்பிடிப்பை முடித்து இறுதி காட்சியை பார்த்த தயாரிப்பாளருக்கு படத்தில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் படத்தை கைவிடுவதாகவும் முழு படத்தையும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி புதிதாக எடுக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
இதனால் தயாரிப்பாளருக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. வர்மா என்ற தலைப்பை ஆதித்ய வர்மா என்று மாற்றி துருவ் கதாநாயகனாக நடிக்க மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். புதிய கதாநாயகியாக பனிடா சாந்துவை ஒப்பந்தம் செய்தனர். துருவ் தோற்றத்தையும் மாற்றினர். பாலாவுக்கு பதில் கிரிச்சய்யா இயக்கினார்.
படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடந்தது. வெளிநாடுகளுக்கு சென்றும் படமாக்கினர். தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவித்துள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story