தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்


தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்
x
தினத்தந்தி 22 May 2019 5:00 AM IST (Updated: 22 May 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’. கென் ஸ்காட் இயக்கி உள்ளார். இந்த படம் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரானது.

திரைப்பட விழாக்களில் திரையிட்டு விருதுகளையும் பெற்றது. இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவாக தயாராகி உள்ளது.

கடந்த வருடம் மே மாதம் உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வந்தனர். தமிழிலும் இந்த படத்தை ‘வாழ்க்கையை தேடி நானும்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் முதல் தோற்றத்தையும் கடந்த வருடம் கேன்ஸ் பட விழாவில் தனுஷ் வெளியிட்டார். ஆனாலும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் இந்தியா முழுவதும் படத்தை திரையிட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தின் ‘வாழ்க்கையை தேடி நானும்’ என்ற தலைப்பை ‘பக்கிரி’ என்று மாற்றி உள்ளனர். 

இதுகுறித்து தனுஷ் கூறும்போது, ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’ படம் இந்தியாவில் திரைக்கு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் கடினமாக உழைக்கவும், வித்தியாசமான கதைகளில் நடிக்கவும் ரசிகர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த தகவலை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைக்கிறேன்” என்றார்.

Next Story