சினிமா செய்திகள்

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்துக்காகசத்யராஜ், ‘டூப்’ இல்லாமல் சண்டை போட்டார் + "||" + Sathyaraj fight without Doop

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்துக்காகசத்யராஜ், ‘டூப்’ இல்லாமல் சண்டை போட்டார்

‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்துக்காகசத்யராஜ், ‘டூப்’ இல்லாமல் சண்டை போட்டார்
‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற படத்தில் சத்யராஜ், ‘டூப்’ இல்லாமல் சண்டை போட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்த நடிகர்களில், சத்யராஜும் ஒருவர். இப்போது அவர் குணச்சித்ர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படத்தில், அவர் கதைநாயகனாக நடிக்கிறார்.

படத்தை டைரக்டு செய்து வரும் தீரன் கூறியதாவது:-

‘‘இது, பரபரப்பான அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த படம். மகளுக்காக தந்தை பழிவாங்கும் கதை. இதில் சத்யராஜ், டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். சண்டை காட்சிகளில், ‘டூப்’ நடிகரை பயன்படுத்தாமல், அவரே சண்டை போட்டார். அவருடைய மகளாக சுருதி வெங்கட் நடிக்கிறார். அரசியல் செல்வாக்குள்ள தொழில் அதிபராக மதுசூதன் நடிக்கிறார். ஹரீஷ் உத்தமன், சார்லி, ரேணுகா, மயில்சாமியின் மகன் யுவா மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள். மீரா சாஹிப் ராவுத்தர் தயாரிக்கிறார்.

தீயவர்களின் ஆதிக்கம் அதிகமாகும்போது உருவாகும் தனி நபர்கள் கோபம் பற்றி படம் பேசுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றம்தான் படத்தின் கரு. ஒரேநாளில் நடக்கும் கதை. படத்தில், மருத்துவம் தொடர்பான ஒரு ‘சஸ்பென்ஸ்’ இருக்கிறது.

படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்றது. இதுவரை 80 சதவீத காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.’’