‘குருசேத்ரா’ படத்தில் கர்ணனாக அர்ஜுன்; திரவுபதியாக சினேகா!
‘குருசேத்ரா’ படத்தில் கர்ணனாக அர்ஜுனும் திரவுபதியாக சினேகாவும் நடித்துள்ளனர்.
மாபெரும் இதிகாசங்களில் ஒன்று, மகாபாரதம். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த யுத்தத்தை இது விவரிக்கும். அந்த காவியத்தை அடிப்படையாக வைத்து, ‘குருசேத்ரம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் படம் தயாராகி உள்ளது.
இதில் கர்ணனாக அர்ஜுன், துரியோதனனாக தர்ஷன், அர்ஜுனனாக சோனு சூட், சகுனியாக ரவிஷங்கர், திரவுபதியாக சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். நாகன்னா டைரக்டு செய்ய, முனிரத்னா தயாரித்து இருக்கிறார். படத்தின் தமிழ் பதிப்பை எஸ்.தாணு வெளியிடுகிறார்.
‘3 டி’ தொழில்நுட்பத்தில் படம் தயாராகி இருக்கிறது. படம், இம்மாதம் திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story