அர்ஜுனுடன் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் அடுத்து ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.
அவர் நடித்து திரைக்கு வந்த 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் உடனடியாக ஒரு வெற்றி படம் கொடுத்தே தீரவேண்டும் என்ற சூழ்நிலையில் அவர் இருந்து வருகிறார்.
இப்போது அவர், ‘ஹீரோ’ என்ற புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில், அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படம் தொடர்பான அனைத்து வேலைகளிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். ‘ஹீரோ’ வெற்றி பெறுவாரா, பார்க்கலாம்.
Related Tags :
Next Story