சினிமா செய்திகள்

கராத்தே சண்டையில் யாஷிகா + "||" + Yashika in karate fight

கராத்தே சண்டையில் யாஷிகா

கராத்தே சண்டையில் யாஷிகா
ஜோம்பி படத்தில் யாஷிகா ஆனந்த் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜோம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். புவன் இயக்குகிறார்.

இந்த படத்தில் யோகிபாபு, மனோபாலா, கோபி, சுதாகர் ஆகியோரும் நடிக்கின்றனர். நகைச்சுவை படமாக தயாராகிறது. ஹாலிவுட் பட உலகில் அதிகமாக ஜோம்பி கதைகள் வந்துள்ளன. தமிழுக்கு இந்த படம் புதுமையாக இருக்கும் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள். கதாநாயகன், கதாநாயகி இல்லாத படமாக தயாராகி உள்ளது.

இதில் யாஷிகா ஆனந்த் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். யாஷிகா நிஜமாகவே கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவர். எனவே கராத்தே சண்டையை படத்தில் பயன்படுத்தி உள்ளனர். வில்லன்களை யாஷிகா கராத்தேவால் தாக்கி சண்டை போடுவது போன்ற காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

தாவி குதித்து சண்டை போடும் காட்சிகளில் டூப் போடாமல் யாஷிகாவே நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.