சினிமா செய்திகள்

‘ஆக்‌ஷன்’ என்ற பெயரில் விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம் + "||" + Under the name of Action, Vishal - Sundar Alliance's new film

‘ஆக்‌ஷன்’ என்ற பெயரில் விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்

‘ஆக்‌ஷன்’ என்ற பெயரில் விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்
விஷால் நடித்து கடந்த வருடம் இரும்புத்திரை, சண்டக்கோழி-2 ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. மே மாதம் அயோக்யா படம் வெளியானது.
விஷால் இதைத்தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்தார். இதில் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

யோகிபாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ கருப்பையா, கபீர்சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படத்துக்கு ‘ஆக்‌ஷன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்து உள்ளனர். படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது:-

“ஆக்‌ஷன் படத்தில் விஷால் ராணுவ கமாண்டோ அதிகாரியாக வருகிறார். ஒரு உண்மையை கண்டுபிடிப்பதற்காக பல நாடுகளுக்கு செல்கிறார். அங்கு ஆக்‌ஷன், சேசிங் என்று எதிரிகளுடன் மோதுகிறார். சமீபத்தில் தேசிய விருது பெற்ற அன்பறிவு படத்தில் விறுவிறுப்பான சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

இதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடாமல் நடித்து இருக்கிறார். இந்த காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும். இதற்காக தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரன் பலகோடிகள் செலவிட்டுள்ளார். படப்பிடிப்பு துருக்கியில் உள்ள அசார்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல் மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பாங்காக் ஆகிய இடங்களில் நடந்துள்ளது.

தற்போது படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.