விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்


விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்
x
தினத்தந்தி 16 Aug 2019 3:00 AM IST (Updated: 16 Aug 2019 9:47 AM IST)
t-max-icont-min-icon

விஜய் சேதுபதி, நயன்தாராவின் சரித்திர படம் டிரெய்லர்

ஆந்திராவில் சரித்திர காலத்தில் வாழ்ந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற வீரனின் வாழ்க்கை கதை ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசை கோர்ப்பு, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 2-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் உருவான ‘மேக்கிங்’ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். பிரமாண்ட காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது இதில் விளக்கப்பட்டு உள்ளது. ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் சண்டை காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் அறிமுக காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் டிரெய்லர் வருகிற 20-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். அதிக பொருட்செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். சங்கத்தமிழன், லாபம், மாமனிதன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

Next Story