இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?


இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
x
தினத்தந்தி 15 Aug 2019 10:00 PM GMT (Updated: 16 Aug 2019 4:17 AM GMT)

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம்

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் 2006-ல் திரைக்கு வந்து நல்ல லாபம் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. இதற்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்று பெயர் வைத்தனர். அரண்மனை அரங்குகள் அமைத்து சென்னையில் படப்பிடிப்பையும் தொடங்கினர்.

இந்த படத்தில் சில நாட்கள் நடித்த வடிவேலு இயக்குனர் சிம்புதேவனுடன் ஏற்பட்ட மோதலால் படத்தில் இருந்து விலகினார். தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் படத்தில் நடித்துக் கொடுக்கும்படி வற்புறுத்தியும் வடிவேலு ஏற்கவில்லை. படம் நின்று போனதால் ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று ஷங்கர் கூறினார்.

அந்த பணத்தை கொடுக்குமாறு வடிவேலுவை வற்புறுத்தினர். புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக வடிவேலுக்கு படங்கள் இல்லை. இந்த நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை நடிக்க வைப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ளார். தர்மபிரபு, கூர்கா படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் 2 புதிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரது நகைச்சுவைக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. எனவே இம்சை அரசன் 2-ம் பாகத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story