இந்தியில் நடிக்கிறார்; சல்மான்கான் படத்தில், பரத்


இந்தியில் நடிக்கிறார்;  சல்மான்கான் படத்தில், பரத்
x
தினத்தந்தி 9 Nov 2019 5:30 AM IST (Updated: 9 Nov 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் ‘காதல்’ படத்தில் நடித்து பிரபலமானவர் பரத். செல்லமே, பட்டியல், வெயில், எம்மகன், கூடல் நகர், நேபாளி, ஆறுமுகம், திருத்தணி, கில்லாடி உள்பட 32 படங்களில் நடித்து இருக்கிறார்.

பரத் நடிப்பில் கடைசியாக சிம்பா படம் வந்தது. அடுத்து இந்தி படத்தில் நடிக்க உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் ‘ராதே’ என்ற படத்தில் நடிக்க பரத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். 

பிரபுதேவா சிபாரிசின் பேரில் இந்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சல்மான்கானுடன் சேர்ந்து வரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக 4 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார். டெல்லியில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்துக்காக 2 தமிழ் படங்களை கைவிட்டுள்ளார். பிரபுதேவா ஏற்கனவே சல்மான்கானை வைத்து இந்தியில் வாண்டட் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.

தற்போது தபாங்-3 என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தற்போது 3-வது முறையாக சல்மான்கானின் ‘ராதே’ படத்தை இயக்குகிறார்.


Next Story