உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மிஷ்கின் டைரக்ஷனில், ‘சைக்கோ’
‘துப்பறிவாளன் ’ என்ற படத்தை இயக்கிய மிஷ்கின் அடுத்து, ‘சைக்கோ’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.
‘சைக்கோ’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். இளையராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் டைரக்டர் ராம் நடிக்க, அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் ஆகிய இருவரும் கதாநாயகி களாக நடிக்கிறார்கள். அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். அவர் கூறியதாவது:-
“வழக்கமான சினிமா விஷயங்களை தகர்த்து, வழக்கத்துக்கு மாறான சிறந்த படங்களை வழங்குவதில், டைரக்டர் மிஷ்கின் கைதேர்ந் தவர். அவருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பதில் வல்லவர்.
அதனால்தான் அவர் தயாரிப்பாளர்களின் டைரக்டராக என்றென்றும் இருக்கிறார். இசை மற்றும் காட்சியமைப்புகளின் மூலம் மாயாஜாலம் நிகழ்த்தும் ஜாம்பவான்கள் இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் ஆகிய இருவரும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர்கள். எல்லோரையும் போல் அவர்களின் மாயாஜாலத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.”
Related Tags :
Next Story