சினிமா செய்திகள்

வித்தியாசமான வேடத்தில் விக்ரம் + "||" + Vikram in a different role

வித்தியாசமான வேடத்தில் விக்ரம்

வித்தியாசமான வேடத்தில் விக்ரம்
விக்ரம் நடித்து கடந்த வருடம் ஸ்கெட்ச், சாமி-2, கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
விக்ரம் நடித்து கடந்த வருடம் ஸ்கெட்ச், சாமி-2, கடாரம் கொண்டான் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது விக்ரமுக்கு 58-வது படம். இன்னும் பெயர் வைக்கவில்லை.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கேரள மாநிலம் அலிபி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் வேட்டி சில்க் சட்டையில் பக்தராக கோவிலுக்கு செல்வதுபோன்ற காட்சியை படமாக்கினர். அந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கோவிலில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இதில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக வருகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.