கன்னட டைரக்டர் இயக்கத்தில் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’


கன்னட டைரக்டர் இயக்கத்தில்  ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’
x
தினத்தந்தி 15 Nov 2019 3:00 AM IST (Updated: 14 Nov 2019 2:48 PM IST)
t-max-icont-min-icon

கன்னட திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர், நாகஷேகர். இவர் கதை எழுதி, முக்கிய வேடத்தில் நடித்து, முதல் முறையாக ஒரு தமிழ் படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ படம் பற்றி நாகஷேகர் கூறியதாவது:-

‘‘அரண்மனை படத்தின் மூலம் கன்னட பட உலகில் இயக்குனர் ஆனேன். அதைத்தொடர்ந்து, சஞ்சு வெட்ஸ் கீதா, மைனா ஆகிய படங்களை கன்னடத்தில் இயக்கினேன். ‘அமர்’ படத்தின் மூலம் அம்பரீஷ்-சுமலதா தம்பதியின் மகன் அபிஷேக்கை கதாநாயகனாக அறிமுகம் செய்தேன். இதையடுத்து, ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமாக இருக்கிறேன். ப்ரீத்தம் திரைக் கதையை எழுத, விஜி வசனம் எழுதியிருக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார்.’’

Next Story