3 வருட தயாரிப்பில் இருந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வை ஐசரி கணேஷ் வெளியிடுகிறார்


3  வருட  தயாரிப்பில்  இருந்த ‘எனை  நோக்கி  பாயும்  தோட்டா’வை  ஐசரி  கணேஷ் வெளியிடுகிறார்
x
தினத்தந்தி 15 Nov 2019 3:45 AM IST (Updated: 14 Nov 2019 3:30 PM IST)
t-max-icont-min-icon

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை பட அதிபர் ஐசரி கே.கணேஷ் வெளியிட முன்வந்து இருக்கிறார்.

தனுஷ் கதாநாயகனாக நடித்து, கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் உருவான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம், 3 வருடங் களாக தயாரிப்பில் இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த படம் திரைக்கு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த படத்தை பட அதிபர் ஐசரி கே.கணேஷ் வெளியிட முன்வந்து இருக்கிறார். அவருடைய வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் படம் திரைக்கு வருகிறது. இம்மாதம் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.

ஐசரி கே.கணேஷ் இதற்கு முன்பு வெளியிட்ட ‘கோமாளி,’ ‘பப்பி’ ஆகிய 2 படங்களும் வெற்றி கரமாக ஓடி, நல்ல வசூல் செய்தன. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து வரும் ‘ஜோஷ்வா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் கதாநாயகனாக வருண் நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் படம் தயாராகி வருகிறது. தொடர்ந்து தரமான கதையம்சம் உள்ள படங்களை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக ஐசரி கே.கணேஷ் கூறினார்.

Next Story