சுருதிஹாசன் பின்னணி குரலில் தமிழில், ஹாலிவுட் படம் ‘ப்ரோஷன்-2’
ஹாலிவுட்டில் தயாரான ப்ரோஷன் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்துள்ளது.
ஹாலிவுட்டில் தயாரான ப்ரோஷன் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை குவித்து வைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ப்ரோஷன்-2 என்ற பெயரில் உருவாகி இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.
தமிழ் பதிப்புக்கு படத்தின் நாயகி எல்ஷா கதாபாத்திரத்துக்கு நடிகை சுருதிஹாசனும் எல்சாவின் தங்கை அன்னா கதாபாத்திரத்துக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினியும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். வசனத்தை பிரபல பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். ஓலப் கதாபாத்திரத்துக்கு சத்யன் குரல் கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் பணியாற்றியது குறித்து சுருதிஹாசன் கூறும்போது, “எல்ஷா கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது மகிழ்ச்சியான அனுபவம். எனது தங்கை அக்ஷராவுடன் எனக்கு இருந்த நெருக்கமான உறவும் பின்னணி குரலுக்கு உதவியாக இருந்தது. பாடலாசிரியர் விவேக் படத்துக்கு பொருத்தமான அருமையான வசனங்கள் தந்துள்ளார்” என்றார்.
பாடலாசிரியர் விவேக் கூறும்போது, “நான் முதன்முதலாக வசனம் எழுதும் படம் இது. இந்த படத்தில் சுருதிஹாசன், திவ்யதர்ஷினி போன்ற திறமையானவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. பின்னணி குரலால் கதாபாத்திரங்களுக்கு தத்ரூபமாக உயிரூட்டி இருக்கிறார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள மனிதத்தை வாழ்வில் தொலைத்து விடக்கூடாது என்ற கருத்து எனக்கு பிடித்தது” என்றார்.
Related Tags :
Next Story