கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகாவின் புதிய படம் ‘தம்பி’


கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் ஜோதிகாவின் புதிய படம் ‘தம்பி’
x
தினத்தந்தி 16 Nov 2019 4:30 AM IST (Updated: 16 Nov 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஜோதிகா காற்றின் மொழி, செக்க சிவந்த வானம், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார்.

ஜோதிகா காற்றின் மொழி, செக்க சிவந்த வானம், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். தற்போது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் பாபநாசம் படத்தை எடுத்து பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அண்ணியுடன் முதல் முறையாக சேர்ந்து நடிப்பது திரில்லிங்காக உள்ளது என்று கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா இதில் நடிக்கிறார். முதல் தடவையாக ஒரே படத்தில் இருவரும் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படத்துக்கு ‘தம்பி’ என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். கார்த்தியின் அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த திகில் படமாக தம்பி தயாராவதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்து உள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், நிகிலா விமல், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் உள்ளனர்.

அடுத்து ஜோதிகா ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில் சசிகுமார் அண்ணனாகவும் ஜோதிகா தங்கையாகவும் நடிக்கின்றனர். இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Next Story