நெருக்கடியில் இருந்து விடுபட்ட சமந்தா
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தெலுங்கில் ரீமேக் ஆகும் திரிஷாவின் 96 படத்திலும் சமந்தா நடித்து முடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமா துறை நமக்கு பயனுள்ள பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. நடிக்க வந்த புதிதில் அதிக வாய்ப்புகள் வந்தன. ஓய்வில்லாமல் நடித்தேன். படங்கள் வெற்றியும் பெற்றன. எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தேன். திருமணத்துக்கு பிறகு குடும்பமே உலகம் என்று ஆகி விட்டது. ஆனாலும் சினிமாவை விடக்கூடாது என்று நடித்துக்கொண்டு இருக்கிறேன்.
எவ்வளவு வெற்றி கொடுத்தாலும் ஏதோ ஒரு சுமையை சுமந்து கொண்டு இருப்பதுபோல் எனக்கு தோன்றியது. சினிமாவுக்கு வந்த புதிதில் கதாநாயகிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் நடக்க வேண்டும் என்றெல்லாம் சில நிர்ப்பந்தங்கள் இருந்தன அந்த வட்டத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்ற நிலைமையும் இருந்தது.
அதில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தேன். யாரோ ஒருவரை பின் தொடர்வது மாதிரி இருக்குமே தவிர நமது தனி முத்திரையை பதிக்க வாய்ப்பே இருக்காது. அந்த மாதிரி நிலையில் இருந்து இப்போது மாறி இருக்கிறேன். அதனால் முன்பு இருந்த பாரம் சுமை நெருக்கடி எல்லாமே பஞ்சுபோல் பறந்து விட்டது. சினிமா துறையில் ஏற்பட்ட மாற்றமும் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களுமே இதற்கு காரணம்.”
இவ்வாறு சமந்தா கூறினார்.
Related Tags :
Next Story