சினிமா செய்திகள்

நடிகர் சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை + "||" + For actor Srinivasan Intensive care

நடிகர் சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை

நடிகர் சீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை
மலையாள நடிகர் சீனிவாசனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சென்னை செல்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்த சீனிவாசனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால் பயணத்தை ரத்து செய்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் சீனிவாசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சீனிவாசன் மலையாள படங்களில் கதாநாயகனாகவும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து இருக்கிறார். பல படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார்.

முன்னணி மலையாள நடிகர் மோகன்லாலுடனும் படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவரது படங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. பல படங்களை டைரக்டு செய்துள்ளார். தேசிய விருது மற்றும் மாநில விருதுகளும் பெற்று இருக்கிறார். சீனிவாசன் எழுதி மம்முட்டி நடித்த ஒரு கத பறயம்போல் மலையாள படம் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க குசேலன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

சீனிவாசன் மகன் வினீத் சீனிவாசனும் மலையாள பட உலகில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் உள்ளார்.