சினிமா செய்திகள்

கோழி கறி விருந்து புகைப்படம் வெளியிட்ட நயன்தாராவை சாடிய ரசிகர்கள் + "||" + Chicken curry feast Photo published Fans of Nayanthara

கோழி கறி விருந்து புகைப்படம் வெளியிட்ட நயன்தாராவை சாடிய ரசிகர்கள்

கோழி கறி விருந்து புகைப்படம் வெளியிட்ட நயன்தாராவை சாடிய ரசிகர்கள்
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்வதையும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
விக்னேஷ் சிவனும் டுவிட்டரில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து காதல் மொழிகளை பதிவிட்டு வருகிறார்.

4 வருடங்களாக இந்த காதல் நீடித்து வருகிறது. இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் நயன்தாரா அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து நடிக்க போவதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ள நயன்தாரா அங்கு பெரிய மேசையில் கோழி கறி, மீன் வகைகளை பரப்பி வைத்து தோழிகளுடன் விருந்து சாப்பிடும் புகைப்படமும் சிக்கனை கையில் வைத்துக்கொண்டு குறும்புத்தனம் செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்காவை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா? அம்மன் வேடத்தில் நடிக்க நீங்கள் விரதம் இருப்பதாக சொன்னார்களே? என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி அவரை சாடி வருகிறார்கள்.