சினிமா செய்திகள்

வேகமாக கார் ஓட்டியதாக புகார் நடிகர் ராஜசேகர் ஓட்டுனர் உரிமம் ரத்து? + "||" + Reportedly driving a fast car Actor Rajasekhar driving license revoked

வேகமாக கார் ஓட்டியதாக புகார் நடிகர் ராஜசேகர் ஓட்டுனர் உரிமம் ரத்து?

வேகமாக கார் ஓட்டியதாக புகார் நடிகர் ராஜசேகர் ஓட்டுனர் உரிமம் ரத்து?
தமிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் மூலம் பிரபலமான ராஜசேகர், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது மனைவி ஜீவிதாவும் பிரபல நடிகை. சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் இருந்து அதிகாலையில் ராஜசேகர் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
பெத்த கொல்கொண்டா பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் மது பாட்டில்கள் இருந்தன. வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


பல்வேறு இடங்களில் ராஜசேகர் ஓட்டி சென்ற காரின் வேகத்தை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பல தடவை அதிக வேகத்தில் காரை ஓட்டியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “நகர பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்ல கூடாது என்று தடை உள்ளது. ஆனால் ராஜசேகர் பல தடவை 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி சென்றுள்ளார். இது போக்குவரத்து விதியை மீறும் செயல்” என்றனர்.

எனவே ராஜசேகர் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும்படி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் போக்குவரத்து துறைக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.