வெப் தொடர்களில் தமன்னா, சமந்தா


வெப் தொடர்களில் தமன்னா, சமந்தா
x
தினத்தந்தி 2 Dec 2019 6:09 AM IST (Updated: 2 Dec 2019 6:09 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.

மார்க்கெட் இழந்தவர்களும் வெப் தொடர்களுக்கு வருகிறார்கள். முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் தமன்னா, சமந்தா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

‘தி நவம்பர் ஸ்டோரி’ என்ற பெயரில் தயாராகும் தமிழ் இணைய தொடரில் தமன்னா நடிக்கிறார். ராம் சுப்ரமணியம் இயக்குகிறார். தந்தை மகள் உறவை சித்தரிக்கும் கதையம்சத்தில் தயாராகிறது. இதில் தமன்னாவின் தந்தையாக ஜி.எம்.குமார் நடிக்கிறார்.

சமந்தா திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், ஓபேபி ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றன. தற்போது தமிழில் வசூல் குவித்த ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் தொடரில் சமந்தா நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். சமந்தாவும் சமூக வலைத்தளத்தில் வெப் தொடரில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இதில் பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோரும் நடிக்கின்றனர். சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Next Story