எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எனக்கு பிடித்தவர்களுக்கு செலவிடுவேன் - கங்கனா ரணாவத்
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எனக்கு பிடித்தவர்களுக்கு செலவிடுவேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு மூக்கு மேல கோபம் என்று எல்லோரும் சொல்வது உண்டு. எத்தனையோ முறை நிறைய பேருடன் சண்டை போட்டு இருக்கிறார். அவருக்கு கோபம் அதனால்தான் இப்படியெல்லாம் தகராறு செய்கிறார் என்று இந்தி பட உலகினர் பேசுவது உண்டு.
கோபப்படும் பழக்கம் குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:-
“என்னை பலரும் கோபக்காரி என்கிறார்கள். எனது கோபத்தில் எப்போதுமே அர்த்தமும் நியாயமும் இருக்கும். எனது ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு திட்டம், தூரப்பார்வை இருப்பதை உணர முடியும். என்னை பின்னால் இழுப்பவர்களுக்கு எப்போதுமே நான் எதிரிதான். நான் எப்போது ஆத்திரத்தை வெளிப்படுத்தினாலும் அதனால் எனக்கு நல்லதுதான் நடந்து இருக்கிறது.
எனக்கு சிறு குழந்தைகளுக்கு இருக்கிற மாதிரி மனது. அது யாருடைய லாஜிக்குக்கும் எட்டாது. நான் பணத்தை வீணாக செலவு செய்கிறேன் என்று பேசுவதும் எனது காதில் விழுகிறது. பணத்தை எவ்வளவு ஜாக்கிரதையாக செலவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். எனது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள பணத்தை பயன்படுத்துகிறேன்.
எனக்கு பிடித்தவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வேன். எனது மனதுக்கு நெருக்கமாக இருக்கிற சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக நன்கொடையாகவும் கொடுப்பேன்.” இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.
Related Tags :
Next Story