சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன், புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்தார். தற்போது புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக மாடல் அழகி கீத்திகா திவாரி நடிக்கிறார். பிரபு, நாசர், விஜயகுமார், விவேக், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, காளிவெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி டைரக்டு செய்கின்றனர். இவர்கள் ஏற்கனவே அஜித்குமார் நடித்த உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.
இதில் பட அதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்துக்கான அறிமுக பாடலை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இந்த பாடல் காட்சியை சரவணனுடன் சேர்ந்து 100 மும்பை நடன கலைஞர்கள் ஆட டான்ஸ் மாஸ்டர் பிருந்தா படமாக்குகிறார்.
Related Tags :
Next Story