சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’ + "||" + Sivakarthikeyan's new movie 'Doctor'

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’
நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ எனும் தலைப்பில் புதிய படத்தில் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்கள் வந்தன. மிஸ்டர் லோக்கல் தோல்வி அடைந்தது. நம்ம வீட்டு பிள்ளைக்கு வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய கனா தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதிலும் கவுரவ தோற்றத்தில் வந்தார். அடுத்து சிவகார்த்திகேயன் சூப்பர்மேன் கதாபாத்திரம் ஏற்றுள்ள ஹீரோ படத்தின் படப்பிடிப்பை முடித்து கடந்த மாதமே திரைக்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் பணபிரச்சினை கோர்ட்டு வழக்கு போன்ற விவகாரங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. தற்போது சமரசம் ஏற்பட்டு வருகிற 20-ந்தேதி திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்து உள்ளனர்.

அடுத்து புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயாராகி உள்ளார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமானவர். படத்துக்கு டாக்டர் என்று தலைப்பு வைத்துள்ளனர். கதாநாயகியாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா நடிக்கிறார்.

வினய், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அதிரடி நகைச்சுவை படமாக தயாராகிறது. கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் பட நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனே இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பூட்டிய வீட்டுக்குள் டாக்டர் மர்ம சாவு
பூட்டிய வீட்டுக்குள் டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
2. நாகார்ஜுனா மகனை சந்தித்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் வந்தன. இதில் மிஸ்டர் லோக்கல் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. நம்ம வீட்டு பிள்ளை நல்ல வசூல் பார்த்தது.
3. புழுதிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்
புழுதிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க நோயாளிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4. பேனர் வைப்பதை தவிர்ப்பது நல்லது - நடிகர் சிவகார்த்திகேயன்
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
5. வைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்?
புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.