சினிமா செய்திகள்

புது கதாநாயகனுடன்ரம்யா நம்பீசன் நடிக்கும் நகைச்சுவை படம் + "||" + Comedy starring Ramya Nambeesan

புது கதாநாயகனுடன்ரம்யா நம்பீசன் நடிக்கும் நகைச்சுவை படம்

புது கதாநாயகனுடன்ரம்யா நம்பீசன் நடிக்கும் நகைச்சுவை படம்
ரியோராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தின் மூலம் அறிமுகமான ரியோராஜ், அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்-நடிகைகளும் இணைகிறார்கள்.

இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, பாலசரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ‘ஆடுகளம்’ நரேன்  ஆகியோரும் படத்தில் இணைகிறார்கள். அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக-நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகிறது. ராஜேஷ்குமார், பத்மா, எல்.சிந்தன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். பத்ரி வெங்கடேஷ் டைரக்டு செய்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக முழுமையான நகைச்சுவை படத்துக்கு அவர் இசையமைக்கிறார்.