கதாநாயகனை கட்டிப்பிடித்து திடீர் முத்தம் கொடுத்த கதாநாயகி!
கதாநாயகி துணிச்சலாக கதாநாயகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நடித்துள்ளார்.
தான் வரைந்த ஓவியம் போல் எதிர்கால மனைவி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டான், ஒரு இளைஞன். அதிர்ஷ்டவசமாக அப்படியே ஒரு பெண்ணை சந்தித்தான். அவள், அவனுடைய காதலை ஏற்றாளா? என்ற கேள்விக்கு பதிலாக அமைகிறது, ‘உதய்’ படம். ‘மதராச பட்டினம்’ படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்த லீமா, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக நடிப்பதுடன் படத்தை தயாரிக்கிறார், உதய். கதை-திரைக் கதை-வசனம்-டைரக்ஷன்: தமிழ்செல்வன்.
படத்தில் கதாநாயகன்-கதாநாயகி சம்பந்தப்பட்ட ஒரு முத்த காட்சி இடம்பெறுகிறது. அதில் நடிக்க கதாநாயகன் தயங்கினார். கதாநாயகி துணிச்சலாக கதாநாயகனை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார். இந்த திடீர் முத்தம், படக் குழுவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story