கிறிஸ்துமஸ் விருந்தாக ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’


கிறிஸ்துமஸ் விருந்தாக  ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’
x
தினத்தந்தி 3 Dec 2019 4:02 PM IST (Updated: 3 Dec 2019 4:02 PM IST)
t-max-icont-min-icon

நகைச்சுவை படமான ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா,’ கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, படத்தில் வீரா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ‘குக்கூ’ படத்தில் கண்பார்வையற்றவர் வேடத்தில் நடித்து எல்லோரையும் கலங்க வைத்த மாளவிகா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பசுபதி நடித்து இருக்கிறார். கனமான வேடங்களில் நடித்த மாளவிகா, பசுபதி இருவரும் இந்த படத்தில், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி அதன் டைரக்டர் அவினாஷ் ஹரிகரன் கூறியதாவது:-

“இது, என் கனவுப்படம். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில், விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் உள்ளன. நூறு சதவீதம் நகைச்சுவைக்கு உறுதி அளிக்கும் படம், இது. இந்த படத்துக்குப்பின் வீராவின் பாணியே மாறிவிடும். மாளவிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி படங்களிலும் நடித்து திறமையான நடிகை என்று நிரூபித்தவர், இவர். ‘குக்கூ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.

ரோபோ சங்கர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவ்யா வேணு கோபால் தயாரித்து இருக்கிறார்.”

Next Story